• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss: முதலில் ஓடிடி, பிறகு தான் டிவி - புதிய பரிமாணத்தில் பிக் பாஸ்!

Bigg Boss: முதலில் ஓடிடி, பிறகு தான் டிவி - புதிய பரிமாணத்தில் பிக் பாஸ்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஓடிடி-யில் முடிந்த பிறகு பிக் பாஸ் சீசன் 15-ஐ கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

  • Share this:
    முதன் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிடி-யில் ஒளிபரப்பாகிறது.

    வியாகாம் 18 பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸை முதல் ஆறு வாரங்களுக்கு வூட் ஆப்பில் முதலில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. பிக் பாஸ் OTT என்ற தலைப்பில், முதன் முறையாக இதை முயற்சி செய்கிறது வியாகாம். ஆகஸ்ட் 2021 முதல் வூட் ஆப்பில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு வேறு வித அனுபவங்களை நிச்சயம் தரும்.

    இதில் முக்கியமாக பார்வையாளர்கள் எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை ஆப்பில் பார்க்க முடியும். 24*7 பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்வையாளர்கள் லைவாக பார்க்க முடியும். ஓடிடி-யில் முடிந்த பிறகு பிக் பாஸ் சீசன் 15-ஐ கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டிவிக்கு முன்னால் ஓடிடி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது, டிஜிட்டல் உலகில் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும் என வியாகாம் 18 டிஜிட்டல் அதிகாரி கெளரவ் ரக்‌ஷித் தெரிவித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட இந்தி பிக் பாஸ் பார்வையாளர்கள், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். தமிழில் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: