விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் மாஸ்க் அணிந்த வில்லன் குறித்த புதிக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 66 வது படமான பீஸ்டின் ட்ரெய்லர் ஏப்ரல் 2 மாலை 6 மணிக்கு வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன்கள் பார்வைகளை யூடியூபில் பெற்று சாதனைப் படைத்தது. ட்ரெய்லரில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்க் அணிந்த வில்லன் நடிகர் யார் என்பதில் குழப்பம் நிலவியது. அவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தகவல் வெளியானது. அதனை நாமும் செய்தியாக வெளியிட்டிருந்தோம். ஆனால், அது தவறு. அது ஷைன் டாம் சாக்கோ அல்ல.
மாஸ்க் அணிந்திருந்த அந்த நடிகர் இந்தியின் பிரபல நடிகரான அங்கூர் விகால். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் பயின்றவர். ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். ஆஸ்கர் வென்ற ஸ்லம் டாக் மில்லியனரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பிற்கு ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் அவார்ட் கிடைத்தது.
ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!
அங்கூர் விகால் தமிழில் மரியான் படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் அவரது இரண்டாவது திரைப்படம். தற்போது அதிகளவில் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். மாஸ்க் அணிந்து நடித்தது சவாலாக இருந்தது என்று கூறியிருக்கும் அவர், ட்ரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், பீஸ்டில் உங்களை ரசிக்க வைக்கிற நிறைய விஷயங்கள் இருக்கிறது என கூறியுள்ளார்.
சூர்யாவின் உள்ளம் உருகுதைய்யா பாடல் வீடியோ
தீவிரவாதிகள் சென்னையில் உள்ள மால் ஒன்றை தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து, சிறையில் இருக்கும் முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கும்படி அரசுக்கு கெடு விதிக்கிறார்கள். மாலுக்குள் இருக்கும் RAW அதிகாரி வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகளை உள்ளிருந்தபடியே தாக்கி முறியடிக்கிறார். கடைசியில் அவர் போடும் திட்டப்படி தப்பிச் செல்லும் தீவிரவாதிகள் முழுவதுமாக அழிக்கப்படுகிறார்கள். இதுதான் பீஸ்ட் படத்தின் கதை. ஏப்ரல் 13 வெளியாகும் படத்துக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.