Home /News /entertainment /

Beast Trailer: விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Beast Trailer: விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

பீஸ்ட் ட்ரைலர்

பீஸ்ட் ட்ரைலர்

பீஸ்ட் படத்தின் டீசர் அல்லது ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.

    பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

    வலிமை படம் நஷ்டம் - உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்!

    இதையடுத்து காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அரபிக் குத்துபாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

    மகளின் திருமண வரவேற்பு... பிரபலங்களை அழைக்கும் இயக்குநர் ஷங்கர்!



    இதைத் தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா என்ற பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர் படக்குழுவினர். இதனால் பீஸ்ட் படத்தின் டீசர் அல்லது ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி