Home /News /entertainment /

Beast 3rd Single: பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு!

Beast 3rd Single: பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியீடு!

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள். இந்தப் பாடல் இப்போது வரை யூ-ட்யூபில் 270 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

    ஆஸ்கர் வென்ற படத்தில் நடித்த பீஸ்ட் வில்லன்!

    இதையடுத்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாலை பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!



    இதற்கிடையே வரும் ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இதையொட்டி விஜய் கலந்துக் கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி