நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான பீஸ்ட் மோட் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!
காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள். இந்தப் பாடல் இப்போது வரை யூ-ட்யூபில் 270 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதையடுத்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்துக்கான முன்பதிவு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் கிங்கான விஜய் பீஸ்ட் படத்திலும் வசூல் சாதனைகளைப் புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவிலேயே வசூல் சாதனை செய்த விஜய்யின் பீஸ்ட்!
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் மோட் எனப்படும் அந்தப் பாடலை விவேக் எழுத, அனிருத் பாடியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.