Thalapathy 65 : அடடே! Beast டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜயின் வயது? எப்படி தெரியுமா?

Beast டைட்டிலில் ஒழிந்திருக்கும் விஜயின் வயது

பீஸ்ட் (BEAST) என்பதன் ஆங்கில எழுத்தில் இருந்து நடிகர் விஜயின் வயதை கணக்கிடலாம்.

  • Share this:
    நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அவரது புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    கையில் ஷாட் கன் உடன் விஜய் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

    தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என நேரடி பொருள் ஆக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே பீஸ்ட் என்பதன் ஆங்கில எழுத்தில் இருந்து நடிகர் விஜயின் வயதை கணக்கிடலாம். நடிகர் விஜய்க்கு தற்போது 47 வயது ஆகின்றது. படத்தின் தலைப்பினை Beast என்பதை A,B,C,D வரிசையில் எண்களை போட்டுப்பார்த்தால் அதன் கூட்டுத்தொகை விஜயின் வயது வரும்.

    B(2) + E(5) + A(1) + S(19) + T(20) = 47 என வருகின்றது.

     
    Published by:Sankaravadivoo G
    First published: