Home /News /entertainment /

Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!

Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!

விஜய்

விஜய்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பீஸ்ட் திரைப்படம் ஆரம்பிக்கிறது.

  நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதற்கான விடை ட்ரைலரிலேயே தெரிந்து விட்டது. இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் அதை கொஞ்சம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

  நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

  ராஜஸ்தானின் ஜோத்பூரில் பீஸ்ட் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அங்கிருக்கும் ஒரு குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையை விட்டு பறக்கிறது. அப்போது வீரராகவனாக வரும் விஜய் என்ட்ரி கொடுத்து அந்த பலூனை பிடித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார். அங்கே திடீரென நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் அடித்து துவம்சம் செய்கிறார். ஸ்னைபர் கன்னில் பயங்கரவாதி ஒருவரின் காரை சுட்டு வீழ்த்தும் போது, எந்தக் குழந்தையை சிரிக்க வைத்தாரோ அந்த குழந்தை இறந்து விடுகிறது. வீரராகவன் விரக்தி அடைந்து அப்செட் ஆகும் இடத்தில் பீஸ்ட் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

  விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்

  குழந்தை இறந்ததும் ராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கும் விஜய் RAW-ல் இருந்து வெளியேறுகிறார். மறுபுறம் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் நடத்தும் டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் ப்ரீத்தியாக வருகிறார். வீரராகவன் அந்த செக்யூரிட்டி சர்வீஸில் பணியாற்ற வருகிறார். விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி பட்டாசு.

  உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக பொங்கி எழுந்த விஜய்!

  சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றிற்கு செக்யூரிட்டி சர்வீஸ் கொடுக்கும் காண்ட்ராக்ட் விடிவி கணேஷுக்கு கிடைக்கிறது. அந்த நேரத்தில் அந்த மாலை கைப்பற்றும் பயங்கரவாதிகள், சக பயங்கரவாதி ஒருவரை விடுவித்தால் தான் அங்கே உள்ள மக்களை உயிரோடு விடுவோம் என பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். வீரராகவனும் அவர்களுடன் பிணையக் கைதியாக உள்ளார். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லியை பின்னுக்கு தள்ளி, தனக்கே உரிய பாணியில் காமெடி பண்ணி ஸ்கோர் செய்கிறார் விடிவி கணேஷ்.

  Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

  அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது சாணிக்காயிதம் படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகி செல்வராகவனுக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை காட்டியுள்ளது.

  பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் விஜய் என்பதை, சுவாரஸ்யமாகவும் ஆங்காங்கே டார்க் காமெடியுடனும் சொல்லியிருக்கிறார் நெல்சன் திலீப் குமார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Beast

  அடுத்த செய்தி