Home /News /entertainment /

Beast: பீஸ்ட் படத்தின் அட்டகாச சண்டைக்காட்சிகள் - சவுண்டே தெறிக்க விடுது!

Beast: பீஸ்ட் படத்தின் அட்டகாச சண்டைக்காட்சிகள் - சவுண்டே தெறிக்க விடுது!

பீஸ்ட்

பீஸ்ட்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சவுண்ட்ஸ் ஃபிரம் தி பீஸ்ட் என புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

    பீஸ்ட் படத்தின் சவுண்ட்ஸ் ஃபிரம் தி பீஸ்ட் ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.

    தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா, பீஸ்ட் மோடு ஆகியப் பாடல்களும் வெளியாகின. இதையடுத்து நாளை பிரமாண்டமாக வெளியாகிறது பீஸ்ட் திரைப்படம். இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக பல ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

    திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!



    முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

    அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சவுண்ட்ஸ் ஃபிரம் தி பீஸ்ட் என புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சண்டைக்காட்சிகளில் வரும் கத்தி மற்றும் துப்பாக்கி சவுண்டை எல்லாம் இணைத்து அந்த வீடியோ தயாராகியுள்ளது. தற்போது அந்தப் ப்ரோமோ லைக்ஸை குவித்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Sun pictures, Tamil Cinema

    அடுத்த செய்தி