Home /News /entertainment /

Beast Vijay: விஜய்யின் முற்போக்கு பிம்பத்தை அடித்து நொறுக்கிய பீஸ்ட்

Beast Vijay: விஜய்யின் முற்போக்கு பிம்பத்தை அடித்து நொறுக்கிய பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட்

இதற்கு முன்னர் இதே போல விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்திலும் இஸ்லாமிய அடையாளங்களுடன் தீவிரவாதிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தனர்.

    பீஸ்ட் திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக பேசப்பட்டு உள்ள அரசியல், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட செயலா என தற்போது பேச்சு எழத் தொடங்கியுள்ளது.

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில், தமிழ் சினிமாவில் விஜயகாந்த், அர்ஜூன் உள்ளிட்டோரால் அடித்து தீ வைக்கப்பட்ட பழைய கதையான பாகிஸ்தான் தீவிரவாதிகள், கதையை மீண்டும் எடுத்துள்ளது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, மத்திய அரசிற்கு எதிராக தொடர்ந்து விஜய் நிலைப்பாடு எடுத்து வருவதாக பேசப்பட்டு வந்தது. தேர்தல் நேரத்தில் விஜய் சைக்கிளில் வந்தது கூட, மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து என பேசப்பட்டது.

    நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் பங்கேற்று இருந்தபோது, வருமான வரித்துறை விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து சென்றது தொடங்கி, மத்திய அரசு விஜய்யை பழி வாங்க நடவடிக்கை எடுப்பதாக ரசிகர்கள் கொதித்து எழுந்த நிலையில், மீண்டும் நெய்வேலி திரும்பி ரசிகர்கள் முன்னால் ஆர்ப்பரித்து விஜய் செல்பி எடுத்துக் கொண்டது வரை, மத்திய அரசுக்கு எதிராக விஜய் செய்யும் அரசியல் இது என கொண்டாடப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து இதனை மறுத்து வரும் விஜய், அண்மையில் சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில், வீட்டிலிருந்து சைக்கிளில் போனது எதார்த்தமான ஒன்று என பதிலளித்தார். மேலும் அண்மையில் வெளிவந்துள்ள பீஸ்ட் திரைப்படம், முழுக்க முழுக்க மத்திய அரசு நிலைப்பாடுகளை ஆதரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. தேர்தல் நேரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக, மத்திய அரசு பேசும் அரசியலை ஆதரிக்கும் கருத்துக்கள் இந்த திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதும் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இஸ்லாமிய வழிபாட்டு அடையாளங்களான தொப்பி, தாடி, உடை உள்ளிட்டவை தீவிரவாத குறியீடுகளாகவும் காட்டப்பட்டுள்ளது, மத்திய அரசை குளிர்விக்கும் போக்கு எனவும் தற்பொழுது பேச்சு எழ தொடங்கி உள்ளது.

    சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பீஸ்ட் டிக்கெட் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!

    இதற்கு முன்னர் இதே போல விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்திலும் இஸ்லாமிய அடையாளங்களுடன் தீவிரவாதிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தனர். வேலாயுதம், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் வெளிநாட்டிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவது போலவும், அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இந்தியாவில் இளைஞர்கள், ஸ்லீப்பர் செல்கள் ஆக மாற்றப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும். இதன் மூலம் ஆரம்பத்தில் இருந்தே விஜய் இஸ்லாமிய எதிர்ப்பு குறியீடுகளை தன் திரைப்படங்களில் பதிவு செய்து வருவதாக தற்பொழுது முந்தைய படங்களை சுட்டிக்காட்டி பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்

    முற்போக்கு அரசியலை விஜய் முன்னெடுப்பதாக அண்மைக்காலமாக ஒரு பிம்பம் உருவாகி வந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் அந்த இமேஜை ஒட்டுமொத்தமாக தற்பொழுது தகர்த்து எறிந்து உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி