Home /News /entertainment /

'மாஸ்டர் நாங்க அப்றமா வாறோம்' : வைரலாகும் பீஸ்ட் பாடல் ப்ரொமோ

'மாஸ்டர் நாங்க அப்றமா வாறோம்' : வைரலாகும் பீஸ்ட் பாடல் ப்ரொமோ

பீஸ்ட் படத்தின் 2வது பாடலாக விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' இன்று மாலை வெளியாகவுள்ளது.

பீஸ்ட் படத்தின் 2வது பாடலாக விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' இன்று மாலை வெளியாகவுள்ளது.

பீஸ்ட் படத்தின் 2வது பாடலாக விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' இன்று மாலை வெளியாகவுள்ளது.

    பீஸ்ட் படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ப்ரொமோ வைரலாகி வருகிறது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் படத்தின் முதல்பாடலாக வெளியான 'அரபிக் குத்து' யூடியூபில் பல ரிக்கார்டுகளை முறியடித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    பீஸ்ட் படத்தை ஏப்ரல் 13-ம் தேதி புதன் கிழமையன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை படத்தின் 2வது பாடலாக விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக சன்பிக்சர்ஸ் புரொமோவை வெளியிட்டுள்ளது.


    இதில் ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்டோருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க நெல்சன் முயலும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. இதனால் அடுத்த புரொமோ எப்போது என்று ரசிகர்கள் சன் பிக்சர்ஸை கேட்டு வருகின்றனர்.

    விஜய்யின் 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.

    பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.



    ஹலமதி ஹபீபோ எனத் தொடங்கும் அரபிக் குத்து பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் தற்போது யூ-ட்யூபில் 182 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி