Beast: இன்று நள்ளிரவில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!

பீஸ்ட்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படத்தின் செகண்ட் லுக் இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பீஸ்ட் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என்பதுதான் நேரடி பொருள். அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து பீஸ்ட் என்ற பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில்  உள்ளனர்.
Published by:Murugesh M
First published: