Beast second look: தெறிக்கவிடும் ‘பீஸ்ட்’ செகண்ட் லுக்!

பீஸ்ட் செகண்ட் லுக்

நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் செகண்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜயின் 65வது படத்தை  கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களின்  இயக்குநரான செல்சன் இயக்குகிறார். படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துவரும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: அவமானத்தை வெகுமானம் ஆக்கிய விஜய்..

இந்நிலையில், நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அவரது புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கையில் ஷார்ட் கன் உடன் விஜய் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.



கண்ணுல கூலர்ஸ், வாயில புல்லட், கையில துப்பாக்கி என நடிகர் விஜய் மாஸாக உள்ளார்.  இந்த  செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைராக்கி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: