Home /News /entertainment /

Beast: பீஸ்ட்ல விஜய்க்கு அப்புறம் இவர் தான்! பாராட்டுகளைப் பெறும் முக்கிய நடிகர்!

Beast: பீஸ்ட்ல விஜய்க்கு அப்புறம் இவர் தான்! பாராட்டுகளைப் பெறும் முக்கிய நடிகர்!

பீஸ்ட்

பீஸ்ட்

மற்ற கதாபாத்திரங்களுக்கு நெல்சன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்குப் பிறகு அதிக கைத்தட்டல்களைப் பெற்றிருக்கிறார் நடிகர் விடிவி கணேஷ்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    Beast: நெல்சன் விஜய்யை வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். எப்போதும் போல விஜய்யின் ஸ்கிரீன் பிரெசன்ஸ் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மற்ற கதாபாத்திரங்களுக்கு நெல்சன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

    இந்நிலையில், விஜய்யை அடுத்து பீஸ்ட் படத்தில் அதிக கைதட்டல்களைப் பெற்றது நடிகர் விடிவி கணேஷ். யோகி பாபு, கிங்ஸ்லி என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், தனது சிறப்பான நடிப்பிற்காக அதிக கைதட்டல்களைப் பெற்றுள்ளார் விடிவி கணேஷ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி