Home /News /entertainment /

Beast: உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக பொங்கி எழுந்த விஜய்!

Beast: உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக பொங்கி எழுந்த விஜய்!

பீஸ்ட்

பீஸ்ட்

தமிழகத்தில் இந்தி திணிப்பு பிரச்னை பல வருடங்களாக உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று.

    பீஸ்ட் திரைப்படத்தில் இந்திக்கு எதிராக விஜய் பேசும் வசனம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படத்தில் எப்போதும் போல விஜய் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அரபிக் குத்து பாடலில் அவரது நடன அசைவு கண்களுக்கு விருந்தாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    படத்தில் வரும் ஒரு காட்சியில் 'உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா, எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது’ என்ற வசனத்தைப் பேசுகிறார் விஜய். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

    தமிழகத்தில் இந்தி திணிப்பு பிரச்னை பல வருடங்களாக உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி தான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார்.



    அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளானது.

    விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்

    இதையடுத்து சிம்புவும், அனிருத்தும் தமிழால் இணைவோம் என ட்வீட் செய்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், இந்தியை எதிர்த்து பேசியது தமிழர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி