ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

அரபிக் குத்து

அரபிக் குத்து

அரபிக்குத்து பெரிய திரையில் மூன்று முறை ரிப்பீட் செய்ய மதிப்புள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படத்தைப் பார்த்தவர்களோ தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.

பீஸ்ட் எனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது - பூஜா ஹெக்டே!

பீஸ்ட் இடைவேளை. ஒவ்வொரு ஃபிரேமிலும் ஸ்வாக்கைக் கொட்டும் அட்டகாசமான தளபதி விஜய், சிறப்பாக அமைக்கப்பட்ட அதிரடி காட்சிகள் நிறைந்த ஃபன் திரைப்படம். மால் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இரண்டாம் பாதிக்கு தயாராகிறோம்.

முதல் பாதி என்கேஜிங்காகவும் எண்டெர்டெயினாகவும் உள்ளது.

கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நினைவில் கொள்ளுங்கள், அரபிக்குத்து பெரிய திரையில் மூன்று முறை ரிப்பீட் செய்ய மதிப்புள்ளது. கடந்த சில வருடங்களில், தளபதி விஜய் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுவதை பார்க்கவில்லை. ஜானியின் சிறப்பாக வேலை செய்திருக்கிறார். அடுத்த 3-4 படங்களுக்கு அவரையே நடன இயக்குனராக நியமிக்க வேண்டும். நிச்சயமாக, பூஜை ஒரு மில்லியன் ரூபாயாக தெரிகிறார்.

ஹலமதி ஹபிபோ பாடலில் தளபதி விஜய்யின் அசத்தலான அசைவுகளைப் பார்ப்பதற்கு விருந்தாக இருக்கும்! மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் கேட்கிறார்கள். சமீப காலங்களில் விஜய் சிறப்பாக நடனமாடிய பாடல்களில் இதுவும் ஒன்று!

முதல் பாதி: நெல்சன் திலீப்குமாரின் டிரேட்மார்க் ஸ்ட்ரெஸ்பஸ்டர் பேக்கேஜிங். ஜாலியா கமர்ஷியலா எடுத்துடுபோறாரு.

இரண்டாவது பாதி: வீர ராகவனின் பீஸ்ட் மோட் ஆக்‌ஷன்

விஜய் கரியரில் மிகச் சிறப்பான படம். துப்பாக்கி, போக்கிரி, கத்தி எல்லாம் ஒண்ணுமே இல்ல இதுக்கு முன்னாடி.. முதல் பாதி 1000 ரூபாய்க்கு மேல் ஒர்த்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Beast, Thalapathy vijay