சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்று பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விடுமுறையுடன் டிக்கெட்டையும் ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
தமிழின் உச்ச நட்சத்திரம் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கடைசியாக 2021-ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் விஜய் இணைந்து நடித்த 'மாஸ்டர்' என்ற ஆக்ஷன் படம் வெளியானது. தற்போது பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர், படத்தின் பாடல்கள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன.
விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்
ரஜினிகாந்த் படங்களின் ரிலீஸுக்கு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இருப்பினும், சமீபகாலமாக விஜய்யின் புகழ் அதிகரித்து வருவதால், அவரின் படங்களைப் பார்க்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சலுகைகள் மற்றும் விடுமுறைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. பீஸ்ட் வெளியீட்டுக்கு முன்னதாக, சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனமான ஆரா இன்ஃபோமேடிக்ஸ் தீவிர விஜய் ரசிகர்களான தங்கள் ஊழியர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!
ஆரா இன்ஃபர்மேடிக்ஸ் மேற்கூறிய தனது அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. ‘பீஸ்ட்’ வெளியீட்டை முன்னிட்டு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுத்தனத்தை தடுக்கும் நடவடிக்கையில், தங்களது ஊழியர்களுக்கு திரைப்படத்தின் இலவச டிக்கெட்டுகளை வழங்குவதாகவும் நிறுவனம் அதில் குறிப்பிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Beast