விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், படத்தில் முக்கிய கேரக்டரில் வரும் செல்வாகவனின் ரோல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
செல்வராகவன் சாணிக் காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருப்பதால் படத்தின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிப்பார் என்று அறவிக்கப்பட் பின்னர், வில்லன் கேரக்டரில் செல்வராகவன் இருப்பதுபோன்ற ஸ்டில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
விஜய்க்கு ஏற்ற வில்லனாக அவர் இருப்பார் என ரசிகர்களும் பேசி வந்தனர். தற்போது வரையில் பீஸ்ட் படத்தில் வில்லன் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. 3க்கும் மேற்பட்ட வில்லன்கள் படத்தில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :
சினேகா - பிரசன்னாவின் க்யூட் ஃபேமிலி புகைப்படங்கள்..
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் வில்லன் கேரக்டரில் செல்வராகவன் இடம்பெற மாட்டாராம். அவருக்கு ஜாலியான அரசியல்வாதி கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார். நிஜ வாழ்வில் அரசியல் பேசாவிட்டாலும், புதுப்பேட்டை, என்.ஜி.கே. படங்களின் மூலம் அரசியல் குறித்த கருத்துக்களை செல்வராகவன் வெளிப்படுத்தி இருப்பார். எனவே, அரசியல்வாதி கேரக்டரில் செல்வராகவன் கவனம் பெறுவார் என்பதை உறுதியாக நம்பலாம்.
இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!
அனிருத் இசையமைத்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அடுத்த மாதம் 14ம் தேதியையொட்டி முதல் பாடல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் படம் ரிலீசாகிறது. விஜய் நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக அதாவது இந்தி மற்றும் தென்மாநில மொழிகள் 4 என மொத்தம் 5 மொழிகளில் பீஸ்ட் படம் வெளியாகவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.