பீஸ்ட் படம் ஏமாற்றம் அளித்த நிலையில், அதன் ஒரிஜினில் பின்னணி இசை OST-ஐ அனிருத் வெளியிட்டுள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது.
பீஸ்ட் வெளியாகுவதற்கு முன்பாக படத்திலிருந்து வெளியிடப்பட்ட அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தன.
தொடர்ந்து ட்ரெய்லர் மற்றும் அதன் பின்னணி இசையால் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் மீது ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமுமே பரிசாக கிடைத்தன.
also read : வேற லெவல் ஹாட் லுக்கில் ஜான்வி கபூர்.. வைரல் போட்டோஸ்
பலவீனமான திரைக்கதை, ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளால் சூப்பராக வரவேண்டிய படத்தை, சுமாராகக் கூட வராமல் இயக்குனர் நெல்சன் பார்த்துக் கொண்டார். இதனால் அவர்மீது விஜய் ரசிகர்கள் ஏக கடுப்பில் இருக்கிறார்கள்.
Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!
விமர்சனங்கள் படுமோசமாக இருந்தாலும், படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. இதற்கு தளபதி விஜய் என்ற பிராண்ட் மட்டுமே காரணமாக அமைந்தது.
Also read... ஜெயிலர் படத்துக்காக அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்... எத்தனை கோடிகள் தெரியுமா?
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பாசிட்டிவான விஷயங்களில் ஒன்றான அனிருத்தின் பின்னணி இசை ஒரிஜினலாக வெளியிடப்பட்டுள்ளது. இதை அனிருத் இன்று வெளியிட்டுள்ளார்.
Here we go! #BeastBGM #BeastOST https://t.co/9ebAVsDYhZ
Advance happy birthday dear Thalapathy @actorvijay sir @Nelsondilpkumar @sunpictures
All these tracks are so close to our hearts ❤️🚀 Enjoy 🥁🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) June 20, 2022
பீஸ்ட் பின்னணி இசையை கேட்க...
இந்த ஒரிஜினில் சவுண்ட் ட்ராக்கை ரிப்பீட் மோடில் விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நாளை அவர்களுக்கு மிகப்பெரும் அப்டேட் வரவிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.