ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம்

துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம்

துபாயில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

துபாயில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

டாக்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் படக்குழுவினருடன் துபாயில் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள நிலையில், நெல்சன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டாக்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தது. சன் பிக்சர்ஸ் பேனரில் வெளிவந்த இந்த திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்றது.

படத்தின் திரைக்கதையில் ஏற்பட்ட பலவீனத்தால், நெகடிவ் விமர்சனங்கள் பீஸ்டிற்கு அதிகம் கிடைத்தன. இருப்பினும், அரபிக்குத்து பாடலை பான் வேர்டு பாடலாக மாற்றியது, பூஜா ஹெக்டேவை விஜய்க்கு ஜோடி சேர்த்தது, முந்தைய படங்களைப் போல் இல்லாமல் விஜய்க்கு அதிக ஸ்பேஸ் கொடுத்து கூடுதல் மாஸ்ஸாக காட்டியது உள்ளிட்ட காரணங்களால் நெல்சன் பாராட்டப்படுகிறார்.

இதையும் படிங்க - விக்ரமுடன் வாணி போஜன்... மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்!

அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்குனம் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் படத்தில் இடம்பெற்ற பிரியங்கா மோகன் ரஜினி படத்திலும் இடம் பெறுகிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படக்குழுவினர், பிரியங்கா மோகன், கவின் உள்ளிட்டோருடன் நெல்சன் துபாய் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அவரது மனைவி மோனிஷா நெல்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படம் சறுக்கிய நிலையில் கட்டாய வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற நெருக்கடியுடன், சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ளார் நெல்சன்.

First published:

Tags: Beast, Nelson dilipkumar