Home /News /entertainment /

யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ‘அரபிக்குத்து’ வீடியோ பாடல்…

யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ‘அரபிக்குத்து’ வீடியோ பாடல்…

அரபிக் குத்து பாடலில் விஜய் - பூஜா ஹெக்டே

அரபிக் குத்து பாடலில் விஜய் - பூஜா ஹெக்டே

Arabic Kuthu : கேட்சிங்கான வரிகள், துள்ளலான இசை, ஆட்டம் போட வைக்கும் நடனம், ரசிகர்களை சட்டென கவரும் செட் உள்ளிட்டவைகளால் அரபிக் குத்து பாடலுக்கு லைக்கும் ஷேரும் குவிந்து வருகிறது.

    பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து வீடியோ பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ம்தேதி வெளியானது. அதற்கு முன்பாக படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக அரபிக் குத்து லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    இதுதொடர்பான மேக்கிங் வீடியோ ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அரபிக்குத்து பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். முதலில் வெளியான அரபிக்குத்து லிரிக்கல் வீடியோ மெகா ஹிட்டான நிலையில் கடந்த மாதம் வீடியோ பாடல் வெளியானது.

    சந்தானம் நடித்திருக்கும் குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    இந்நிலையில் அரபிக் குத்து வீடியோ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.



    அரபிக் குத்து பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் வெகுவாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாக விஜய்யின் நடன காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.



    கேட்சிங்கான வரிகள், துள்ளலான இசை, ஆட்டம் போட வைக்கும் நடனம், ரசிகர்களை சட்டென கவரும் செட் உள்ளிட்டவைகளால் அரபிக் குத்து பாடலுக்கு லைக்கும் ஷேரும் குவிந்து வருகிறது.

    இதையும் படிங்க - விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை - மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை

    இதேபோன்று படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ஜாலியோ ஜிம்கானாவின் வீடியோவும் அதிக பார்வைகளை யூடியூபில் பெற்று வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி