நடிகை அபர்ணா தாஸ் தமிழில் கடந்த ஏப்ரல் மாதல் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலே விஜய்யுடன் நடித்ததால் இவர் குறுகிய காலத்திலேயே மிகுந்த பிரபலம் அடைந்ததற்கு ஒரு காரணம் என்றும் கூறலாம்.
நடிகை அபர்ணா தாஸ் 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனோஹரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் தான் அபர்ணா தாஸை நெல்சன் கண்டுப்பிடித்துள்ளார் . தற்போது அபர்ணா தாஸிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தமிழில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து ‘டாடா’ என்ற படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அபர்ணா தாஸிற்கு இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.சமீபத்தில் கோடைக்கால வெக்கேஷனிற்காக மாலத்தீவு சென்றுள்ளார் அபர்ணா தாஸ். கொரோனா லாக்டவுன் முதல் நடிகர், நடிகைகளின் ஃபேவரெட் ஸ்பாட்டாகவே மாலத்தீவு மாறிவிட்டது என்றும் கூறலாம்.
அந்த வகையில் அபர்ணா தாஸிற்கும் மாலத்தீவு மிகவும் பிடித்துவிட்டது என்பது அவரின் இன்ஸ்டாகிராமிலே தெரிந்துக்கொள்ள முடிகிறது. எப்படி என கேட்குகிறீங்களா ? அவர் பதிவிடும் கேப்ஷனை வைத்துதான் சொல்கிறோம்..
also read : வளைக்காப்பு முடிஞ்சிடுச்சு..பேபிக்கு வெயிடிங்! வைரலாகும் ப்ரணித்தாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்..
View this post on Instagram
அழகிய கவுன் அணிந்து அங்கும், இங்கும் ஓடும் ரீல்ஸ் ஒன்றை அபர்ணா தாஸ் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த இடத்தை விட்டு வர மனமில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த புகைப்படத்திற்கு ‘ என் இதயத்தை மாலத்தீவில் விட்டுவிட்டேன் ‘ என்று பதிவிட்டுள்ளார்.
also read : க்யூட்டான இந்த குழந்தை இப்போ ஃபேமஸ் தமிழ் பட நடிகை.. யாரென்று தெரிகிறதா ?
மாலத்தீவிற்கு ஏற்ற காஸ்டியூம் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் அபர்ணா தாஸ் தேவதை போல் இருக்கிறார். அபர்ணா தாஸ் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.