Home /News /entertainment /

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... அடுத்த வாரம் வெளியாகிறது புதிய போஸ்டர்

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... அடுத்த வாரம் வெளியாகிறது புதிய போஸ்டர்

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தையொட்டி அனிருத் டூயட் பாடலை வெளியிட்ட வருகிறார். காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் நிறைந்த காட்சிகளாக பீஸ்ட் படம் உருவாகியுள்ளது.

    விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஒன்று. ஏப்ரல் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை படத்திலிருந்து டைட்டில் அறிவிப்பு, ரிலீஸ் மாத போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து அப்டேட்டுகளை தர சன்பிக்சர்ஸ் தயாராகி விட்டது.

    இதையும் படிங்க : தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?

    இந்நிலையில், அடுத்த வாரம் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருக்கலாம். பெரும்பாலும் ஜனவரி 26-ம்தேதியன்று போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

    முதல் பாடல், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம். ஃபர்ஸ்ட் சிங்கிள் டூயட் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

    இதையும் படிங்க : காணாமல் போன நடிகை, சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுப்பு

    ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தையொட்டி அனிருத் டூயட் பாடலை வெளியிட்ட வருகிறார். அந்தவகையில் இந்த ஆண்டு பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் நிறைந்த காட்சிகளாக பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தை அதிக மொழிகளில் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Beast

    அடுத்த செய்தி