Home /News /entertainment /

பீஸ்ட் FDFS : திருவிழா போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்...

பீஸ்ட் FDFS : திருவிழா போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்...

பீஸ்ட் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பீஸ்ட் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பீஸ்ட் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றதால், பீஸ்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.



இதனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே பீஸ்ட் ரிசர்வேஷன் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் விறுவிறுவென டிக்கெட்டை புக்கிங் செய்துள்ளனர்.

இதையும் படிங்க - Beast: உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக பொங்கி எழுந்த விஜய்!

குறிப்பாக முதல்நாள் முதல் காட்சிக்கு இதுவரையில்லாத அளவுக்கு அதிக டிமாண்ட் காணப்பட்டது.



பெரும்பாலான தியேட்டர்கள், ரசிகர்கள் மன்றத்திற்காக முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டுகளை ஒதுக்கியிருந்தன.

இதையும் படிங்க - Beast: பீஸ்ட்ல விஜய்க்கு அப்புறம் இவர் தான்! பாராட்டுகளைப் பெறும் முக்கிய நடிகர்!

தமிழகத்தை பொருத்தளவில் அதிகப்படியான தியேட்டர்களில், முதல்காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.



இதனை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். டிஜே பாட்டு, மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.



விஜய் படத்தின் முதல் காட்சி எப்போதும் திருவிழாவாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகத்தினரும், ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். படமும் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Beast

அடுத்த செய்தி