‘பீஸ்ட்டை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என இயக்குனர் நெல்சன் ட்வீட் செய்துள்ளார். படம் ரிலீஸான ஏப்ரல் 13-ம் தேதிக்கு பின்னர் அவர் எந்த ட்வீட்டும் செய்யாத நிலையில், இன்றைக்கு பதிவிட்டுள்ளார்.
கலவை விமர்சனங்கள் வந்தாலும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வசூலை அள்ளத் தவறவில்லை. ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் படம் ரூ. 200 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சமீப காலமாக நடித்த படங்களில் மிகுந்த ஏமாற்றத்தை தந்த படம் பீஸ்ட் என அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்துள்ளார். இதில் இயக்குனர் நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க - இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கும் சூர்யா… மெகா ஹிட் பட ரீமேக்குடன் என்ட்ரி
இதுதொடர்பான ஃபோட்டோவை வெளியிட்டுள்ள நெல்சன், அறிக்கை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
சக்சஸ் பார்ட்டி வைத்ததற்கு நன்றி விஜய் சார். இந்த விருந்து மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. இந்த தருணத்தில் விஜய் சாரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு வாய்ப்பு அளித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், காவ்யா மாறன் ஆகியோருக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் நன்றாக அமைந்திருக்காது. அவர்களுக்கு நன்றி.
இதையும் படிங்க - முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் விவேக்கின் மனைவி உருக்கமான கோரிக்கை… நிறைவேற்றுமா தமிழக அரசு?
தடைகள் பலவற்றை உடைத்து எங்கள் மீது அன்பும், ஆதரவும் தந்த ரசிகர்களுக்கு நன்றி. எப்போதும் போல் விஜய் சாருடன் ரசிகர்கள் இருந்தனர். படக்குழுவுக்கு ஆதரவாக இருந்து ரசிகர்கள் பீஸ்ட்டை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர்.
இவ்வாறு நெல்சன் கூறியுள்ளார்.
நெல்சனின் ட்வீட்டை பாராட்டியும், கிண்டல் செய்தும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.