முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

விஜய் - நெல்சன்

விஜய் - நெல்சன்

சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்துக் கொள்வதாகவும், அந்நிகழ்ச்சி ஏப்ரல் 10-ம் தேதி ஒளிபரப்பாகும் எனவும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சன் டிவி-யில் விஜய் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. பின்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் இணையத்தில் படு வைரலானது.

விஜயகாந்த் செயலால் கோபம் தலைக்கேறிய ரஜினி - நடந்தது என்ன?

இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் எப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைப்பெறவில்லை. அதனால் விஜய்யின் மேடைப் பேச்சை மிஸ் பண்ணுவதாக சோகமானார்கள் அவரது ரசிகர்கள்.

மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!

இதையடுத்து அவர் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதாகவும், அந்நிகழ்ச்சி ஏப்ரல் 10-ம் தேதி ஒளிபரப்பாகும் எனவும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் விஜய்யின் நேர்க்காணலை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சன் குழுமத்தில் இருக்கும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. விஜய் கலந்துக் கொள்ளும் பீஸ்ட் சிறப்பு நிகழ்ச்சியை, படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தான் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இது உண்மையிலேயே பீஸ்ட் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast, Nelson dilipkumar