Home /News /entertainment /

Beast: பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Beast: பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய்

விஜய்

சென்னையில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ரூபாய் 1.96 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    Beast Box Office Collection Day 1: நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். ஆனால் படம் தங்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தவில்லை என விஜய் ரசிகர்களே ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என சந்தேகம் எழுந்தது.

    பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்

    இந்நிலையில் சென்னையில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ரூபாய் 1.96 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழக வசூலை பொறுத்தவரை இதுவரை வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் பின்னுக்குத் தள்ளியுள்ளதாம். இதற்கிடையே சர்கார் படம் முதல் நாளில் தமிழகத்தில் 33 கோடி வசூல் செய்திருந்தது. அதனை சமீபத்தில் வெளியான வலிமை வசூல் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி