Home /News /entertainment /

Vijay: விஜய் ஃப்ரெண்ட்லியாக உணர வைத்தார் - உதவி இயக்குனர் நெகிழ்ச்சி!

Vijay: விஜய் ஃப்ரெண்ட்லியாக உணர வைத்தார் - உதவி இயக்குனர் நெகிழ்ச்சி!

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல்டை சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து எடுத்து வருகிறார்கள்.

    பீஸ்ட் படப்பிடிப்பில் அனைவரையும் கம்பர்டபிளாக ஃபீல் பண்ண வைத்தார் என விஜய்யை புகழ்ந்துள்ளார் உதவி இயக்குனர் கவின்.

    மாஸ் நடிகர்களின் படப்பிடிப்பு என்றால் அனைவரும் முள்ளின் மேல்தான் நிற்பார்கள். நடிகருக்கு கோபம் வந்தாலோ, அசௌகரியக் குறைவாகக் கருதினாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு டோஸ் விழும். நடிகர் தான் அதை செய்ய வேண்டுமென்றில்லை. இயக்குனர், ஒளிப்பதிவாளர், புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் என யார் வேண்டுமானாலும் அதை செய்வார்கள்.

    இந்த இறுக்கத்தை தளர்த்துகிறவர் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நடிகராகவே இருப்பார். நடிகரே சகஜமாக பேசி சிரித்து தோள் மீது கைபோட்டால் இறுக்கம் பனியாக கரைந்துவிடும். பீஸ்ட் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறவர் கவின். விஜய்யை பற்றி கூறும்போது, முதல்நாளிலிருந்து எங்க எல்லோரையும் சிரிக்க வைத்து, ரொம்ப கம்பர்டபிளா ஃபீல் பண்ண வைத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல்டை சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து எடுத்து வருகிறார்கள். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. பொதுவாக படத்தில் நடிக்கும் நாயகியோ, சக நடிகர்களோ தான் ஹீரோவைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். உதவி இயக்குனர்கள் ஹீரோக்கள் குறித்து பேசுவது அரிது. விஜய்யின் தோழமையான செயல்பாடு உதவி இயக்குனரை பேச வைத்திருக்கிறது.

    நல்ல கதையும், திறமையும் இருந்தால் விஜய் படத்தின் இயக்குனராகும் அதிர்ஷ்டம் கவினுக்கு அமையலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay

    அடுத்த செய்தி