ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமேசான் மியூசிக்கில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல் எது தெரியுமா?

அமேசான் மியூசிக்கில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல் எது தெரியுமா?

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

கன்னடத்தில் விக்ராந்த் ரோனா பட ரா ரா ராக்கம்மா பாடல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் முதலிடத்திலும் அதிகம் கேட்கப்பட்ட ஆல்பங்களின் வரிசையில் கேஜிஎஃப் 2 பாடல்களும் இடம்பிடித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அந்த ஆண்டு அதிக வசூலித்த படங்கள், அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் போன்ற தகவல்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அமேசான் மியூசிக் இந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அமேசான் மியூசிக்கில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மொழிகளில் அதிக அளவு பாடல்கள் கேட்டுள்ளனர்.

அமேசான் மியூசிக் வெளியிட்டுள்ள தகவலின்படி ஹிந்தியில் பிரம்மாஸ்திரா படத்தில் பிரித்தம் இசையில் ஆர்ஜித் சிங் பாடிய கேசரியா பாடல் அதிகம் கேட்கப்பட்ட பாடல் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. அதே போல அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடலாக பீஸ்ட் பட  ‘அரபிக் குத்து’ பாடல் இடம்பிடித்துள்ளது. அதே நேரத்தில் அதிகம் கேட்கப்பட்ட ஆல்பமாக பீஸ்ட் இடம் பிடித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அனிருத் பாடல்கள்தான் முதலிடத்தில் இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பதிலாக இவர்! - ரஜினிகாந்த்தின் 'தலைவர் 171'-ஐக் கைப்பற்றிய சூப்பர்ஹிட் பட இயக்குநர்?

தெலுங்கைப் பொறுத்தவரை புஷ்பா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘ஓ அண்டாவா...’ பாடல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன. தெலுங்கில் அதிகம் கேட்கப்பட்ட ஆல்பமாக புஷ்பா பட பாடல்கள் இடம் பிடித்துள்ளது.

அதேபோல கன்னடத்தில் விக்ராந்த் ரோனா பட ரா ரா ராக்கம்மா பாடல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் முதலிடத்திலும் அதிகம் கேட்கப்பட்ட ஆல்பங்களின் வரிசையில் கேஜிஎஃப் 2 பாடல்களும் இடம்பிடித்துள்ளன. மஹாபாரதக் கதைகள் அதிகம் கேட்கப்பட்ட பாட்காஸ்ட் ஆகவும், அதற்கடுத்தது கதை பாட்காஸ்டின் பொன்னியின் செல்வனும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast, Valimai