ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விமான பணியாளர் தகாத முறையில் நடந்ததாக விஜய் பட நடிகை குற்றச்சாட்டு… விமான நிறுவனம் நடவடிக்கை

விமான பணியாளர் தகாத முறையில் நடந்ததாக விஜய் பட நடிகை குற்றச்சாட்டு… விமான நிறுவனம் நடவடிக்கை

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

Pooja Hegde Indigo : ட்விட்டரில் அதிரடி புகார் ஒன்றை எழுப்பியுள்ளார் பூஜா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தென்னிந்தியாவின் தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் பூஜா இணைந்து நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தில் பூஜா – விஜய் இடையிலான காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த ஜோடி மீண்டும் ஏற்படாதா என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

இதேபோன்று ஒரு படத்திற்கு பூஜா ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் அதிரடி புகார் ஒன்றை எழுப்பியுள்ளார் பூஜா.

இதையும் படிங்க - நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவின் முக்கிய நிகழ்வுகள்!

அதாவது அவர் மும்பையில் இருந்து கிளம்பிய தனியார் விமானத்தில் பணியாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க - வெளியானது திருமண ஃபோட்டோ... கொள்ளையழகில் நயன்தாரா!!

இதுதொடர்பாக பூஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மும்பையில் இருந்து இன்று கிளம்பும்போது, இண்டியா கோ விமானத்தின் ஊழியர் விபுல் நகாசே என்பவர், எங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் நடந்து கொண்ட விதம் அகங்காரமானது. எந்த வித காரணமும் இல்லாமல் எங்களை அச்சுறுத்தும் விதத்தில் பேசினார். நான் இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் ட்வீட் போடுவதில்லை. ஆனால் இன்றைக்கு எங்களுக்கு நடந்தது மிக மோசமான சம்பவமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு உடனடியாக பதில் அளித்துள்ள இண்டிகோ நிறுவனம், பூஜா ஹெக்டே பயணம் செய்த பிஎன்ஆர் நம்பரை மற்றும் தொடர்பு எண்ணைக் கேட்டு சம்பந்தப்பட்டவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

இரு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Published by:Musthak
First published:

Tags: Pooja Hegde