• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pooja Hegde: பாராட்டுகளை குவிக்கும் ’பீஸ்ட்’ நடிகை பூஜா ஹெக்டேவின் செயல்

Pooja Hegde: பாராட்டுகளை குவிக்கும் ’பீஸ்ட்’ நடிகை பூஜா ஹெக்டேவின் செயல்

பூஜா ஹெக்டே செய்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

  • Share this:
    நலிந்த குடும்பங்களுக்காக அறக்கட்டளை தொடங்கிய பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

    விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தமிழில் இவர் ஏற்கனவே “முகமூடி” படத்தில் நடித்து இருந்தார். சென்னையில் நடைபெற்ற பீஸ்ட் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்.

    இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே செய்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அதாவது தனது நண்பர்களுடன் இணைந்து “All about Love“ எனும் அறக்கட்டளையை துவங்கியிருக்கிறார். இதன் மூலம் நலிந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்து பேசிய பூஜா, “மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை துவங்கி விட்டேன். ஆனால் இந்த அமைப்பின் மூலம் எந்தவொரு பணியையும் செய்யாமல் அதுகுறித்து பேசவிரும்பவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது கொரோனா நேரத்தில் “All about Love“ அறக்கட்டளை மூலம் பல நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை செய்திருக்கிறோம். இதைத்தவிர மருத்துவசதி, ரேஷன் பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறோம். அதனால் இப்போது தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: