Home /News /entertainment /

‘பீஸ்ட் மீம்ஸை பார்த்தேன், படத்தை பார்க்கவில்லை’ – வில்லன் டாம் சாக்கோவின் பேட்டியால் சர்ச்சை

‘பீஸ்ட் மீம்ஸை பார்த்தேன், படத்தை பார்க்கவில்லை’ – வில்லன் டாம் சாக்கோவின் பேட்டியால் சர்ச்சை

பீஸ்ட் படத்தில் டாம் ஷைன் சாக்கோ

பீஸ்ட் படத்தில் டாம் ஷைன் சாக்கோ

Beast Tom Shine Chacko : பீஸ்ட் படத்தின் மூலம்தான் சாக்கோ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரியாக அமையவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார்.

    விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மீம்ஸ்களை மட்டும் பார்த்ததாகவும், படத்தை பார்க்கவில்லை என்றும் அதில் இடம்பெற்ற வில்லன் டாம் சாக்கோ கூறியுள்ளார். அவரது பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    டாக்டர் படத்தின் வெற்றியால் நெல்சன் இயக்கிய  விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், படம் வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை அளித்தது.

    பாடல்கள், ட்ரெய்லர், பின்னணி இசை ஆகியவை சுவாரசியத்தை ஏற்படுத்தினாலும், பலவீனமான திரைக்கதையால் ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் வெற்றி பெற்றது சற்று ஆறுதலை அளித்திருக்கிறது.

    இந்நிலையில் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டாம் சாக்கோ, படம் குறித்து தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துவதோடு, பீஸ்ட் படத்தை கிண்டல் செய்வதாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் வன்முறை காட்சிகள்! 

    பீஸ்ட் படத்தின் மூலம்தான் சாக்கோ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரியாக அமையவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய சாக்கோ, ’நான்இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களைத் தான் பார்த்துள்ளேன்.’ என்று கூறினார்.

    இதையும் படிங்க - இது தான் நேர்மை! விக்ரம் வசூலை அறிவித்த உதயநிதியை மேடையில் பாராட்டிய கமல்

    பீஸ்ட் படத்தில், சாக்கோவை விஜய் அடித்து துவம்சம் செய்து, கயிற்றால் கட்டித் தூக்கி  வருவார். இந்த காட்சி பேசிய சாக்கோ, ‘ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வரும் நபரின் (விஜய்) முகத்தில் ரியாக்சன் இருக்க வேண்டும். அதாவது அவர் சிரமப்படுவது போன்று காட்சி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார்.

    இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால் படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Beast

    அடுத்த செய்தி