முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பீஸ்ட் பட நடிகர்… பெண் இயக்குனர்கள் பற்றி பேசியதால் சிக்கல்…

மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பீஸ்ட் பட நடிகர்… பெண் இயக்குனர்கள் பற்றி பேசியதால் சிக்கல்…

நடிகர் டாம் சாக்கோ

நடிகர் டாம் சாக்கோ

பீஸ்ட் படம் வெளிவந்த பின்னர் அந்த படம் தன்னை ஈர்க்கவே இல்லை என்று கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த கேரளா நடிகரான டாம் சாக்கோ மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தமுறை பெண் இயக்குனர்கள் குறித்து ஏடாகூடமாக பேசி சிக்கலை ஏற்படுத்தி உள்ளார் சாக்கோ.

பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது மனதில் உள்ளதை பேசுகிறேன் என்பதாக கூறிவிட்டு, ஏடாகூடமாக பதிலளித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதை சாக்கோ வழக்கமாக வைத்துள்ளார். பீஸ்ட் படம் வெளிவந்த பின்னர் அந்த படம் தன்னை ஈர்க்கவே இல்லை என்று கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார். பீஸ்ட் படத்தில் காட்சிகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றும், தன்னை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் டாம் சாக்கோ குற்றம்சாட்டியிருந்தார். ஹைலைட்டாக தான் பீஸ்ட் படத்தை பார்க்கவேயில்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆச்சார்யா தோல்வி: 80% சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சிரஞ்சீவி, ராம்சரண்

அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் பெண் இயக்குனர் குறித்து தற்போது அவர் பேசியுள்ளார். சமீபத்தில் பிரஸ்மீட்டில் பங்கேற்ற டாம் சாக்கோ, ‘சினிமா துறையில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன’ என்று கூறினார். அதற்கு செய்தியாளர் ஒருவர், ‘பெண் இயக்குனர்கள் அதிகம் இருந்தால் பிரச்சனைகள் தவிர்க்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பினார்.

‘இளைஞர்களை கெடுக்கும் வேலையை செய்யாதீர்கள்’ - பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

இதற்கு பதிலளித்த டாம் சாக்கோ, ‘பெண் இயக்குனர்கள் அதிகம் வந்தால் பிரச்சனைகளும் அதிகம் வரும். எங்கேயாவது பெண்கள் ஒன்று கூடும் இடத்தில் சண்டை நடக்காமலா இருக்கிறது?’ என்று கிண்டலாக பதிலளித்தார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

First published:

Tags: Beast