நேர்மறை எண்ணம்... தொய்வில்லாத வேகம்... ரஜினியின் சாகசம் குறித்து வீடியோ வெளியிட்ட பியர் க்ரில்ஸ்!

நேர்மறை எண்ணம்... தொய்வில்லாத வேகம்... ரஜினியின் சாகசம் குறித்து வீடியோ வெளியிட்ட பியர் க்ரில்ஸ்!
பியர் க்ரில்ஸ் உடன் ரஜினிகாந்த்
  • Share this:
காட்டுக்குள் ரஜினிகாந்த் உடனான பயணம் குறித்த தனது கருத்தை பியர் க்ரில்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வனப்பகுதியில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் பியர் க்ரில்ஸின் Man Vs Wild நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பியர் க்ரில்ஸ் உடன் Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இதையடுத்து இந்நிகழ்ச்சியின் ட்ரெய்லரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல் குழுவினர் வரும் 23-ம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் காட்டுக்குள் ரஜினிகாந்த் உடனான பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் பியர் க்ரில்ஸ், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நேர்மறை எண்ணம், தொய்வில்லாத வேகம், என அத்தனையும், காட்டுக்குள் அவர் எதிர்கொண்ட சாகசங்களின் மூலம் வெளிப்பட்டது” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் பியர் க்ரில்ஸ் இருவருக்கும் உலகம் முழுவதும் அதிகமான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இருவரும் இந்நிகழ்ச்சியில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நடிகை ஜெயபாரதி வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு - காவலாளி, கார் ஓட்டுநர் கைது!
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading