திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது ஒரு கலை. சில ஈர்க்கும் சில சீச்சீ என சொல்ல வைக்கும். அப்சலியூட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் 'பிஇ பார்'. தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் அப்சலியூட். தயாரிக்கும் படத்தின் பெயர் பார். டாஸ்மாக் நெடி அடித்தாலும் அதற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.
இது பிஇ என்ஜினீயரிங் மாணவர்கள் தங்கள் அரியர்சை எழுத படுகிற அவஸ்தையை நகைச்சுவையாக சொல்லும் படம். 'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இந்தப் படத்தை இயக்குகிறார். காவல்துறை உங்கள் நண்பன் சீரியஸ் திரைப்படம். அதற்கு அப்படியே உல்டாவாக பி இ பார் திரைப்படத்தை நகைச்சுவையாக எடுக்கிறார்கள்.
பிரெண்ட்ஷிப், காமெடி என்ற புதிய ஜானரை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள். அப்சல்யூட் பிக்சர்ஸ் மால்கம், பி ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஒயிட் மூன் டாக்கீஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்.மோ, காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுரேஷ் ரவி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருடன் இஷாரா நாயர், தம்பிராமையா, லிவிங்ஸ்டன், வினோத், ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
Also Read : முன்னாள் காதலி பற்றி நாமினேஷனில் ஓபனாக பேசிய நிரூப் நந்தகுமார்!
விஷ்ணு ஸ்ரீ இசையமைக்கிறார். என்ஜினியரிங் மாணவர்களை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் வெளியான 'விஐபி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அதே பி இ மாணவர்களைப் பற்றி பி இ பார் படத்தை எடுத்து இருக்கிறார்கள். படம் முடிவடையும் நிலையில் உள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் படக்குழு. விஐபி போல இதுவும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.