தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூராக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க கூறி பாடகி சுசித்ரா போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவதூரு பேச்சு காவல் நிலைய புகாருக்கு சென்றது ஏன்?
தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர் 71 வயதான ரங்கநாதன் . 35 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகர், திரைத்துறை செய்தியாளராக உள்ளார்.
திரைத்துறை வாய்ப்பு குறைந்ததால் எதோ திரைத்துறை தொடர்பாக தனக்கு தெரிந்த உருட்டுகதைகளை மெருக்கேத்தி யூடியூப் பக்கங்களில் பேசிவந்தார். இதில் விபரமான பயில்வான் ரங்கநாதன் தான் பேசும் ஆபாச பேச்சுக்கு எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று தெரிந்து தனது பெயரில் யூடியூப் பக்கம் வைத்தக்கொள்ளாமல் பணத்தைப்பெற்றுக்கொண்டு தனியார் யூடியூப் பக்கங்களில் பேசிவந்தார்.
இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த அட்ஜஸ்மெண்டில் தான்... அந்த இயங்குநர் அதில் கொஞ்சம் வீக்.. இந்த நடிகர் பாடி டிமெண்ட் உள்ளவர்.. இந்த தயாரிப்பாளரா ஒருவரை விடமாட்டார் என்று பயில்வான் பேசாத அந்தரங்க விவகாரங்களே இல்லை எனலாம்.
இவர் பேசும் பேச்சுக்களுக்கு ஒருபுறம் ரசிகர்கள் குவிந்தாலும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இவரது பேச்சுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் பல எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் தான் பாடகி சுசித்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இவர் சமீபத்தில் பேசிய பேச்சுகள் சமூக வளைத் தளத்தில் வைரல் ஆனது. ஆனால் விடாத பாடகி சுசித்ரா பயில்வானை செல்போனில் தொடர்புக்கொண்டு தன்னை பற்றிய பேச்சுக்கு ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இப்படி பேசினீர்கள்? உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை இப்படி பேசுவீர்களா? என்று கேள்வி கேட்டு தும்சம் செய்த ஆடியோவும் வைரல் ஆனது
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில் கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப்பற்றி மிக அவதூறாகவும், பேசியிருப்பதாகவும், இதே போன்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்யான செய்திகளை எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவர் பேசிவருவதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாடகி சுசித்ரா.
தன்னை பற்றி அவதூராக பேசிய பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் பாடகி சுசித்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர் புகார்கள் வருவதால் பயில்வான் ரங்கநாதனை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார் அவர் பேசிய யூடியூப் சேனல்களின் விபரங்களை பெற்று வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Controversial speech, Suchitra