தமிழில் இந்த வருட பொங்கலுக்கு விஜய்யின் வாரிசா அஜித்தின் துணிவா என கடந்த சில சில மாதங்களாக ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, தெலுங்கில் சங்கராந்திக்கு பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியா சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவா என ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி இன்றும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா நாளையும் வெளியாகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் இரண்டு படங்களிலும் ஸ்ருதி ஹாசன் தான் ஹீரோயின்.
வீர சிம்ஹா ரெட்டி இன்று வெளியான நிலையில் பாலகிருஷ்ணாவின் ஆக்சன் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக பாலகிருஷ்ணாவின் படங்களில் நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்பதற்கேற்ப சண்டைக்காட்சிகளில் துளியும் நம்பகத்தன்மை இருக்காது. கடந்த சில வருடங்களுக்கு முன் பாலகிருஷ்ணாவின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டது. குறிப்பாக ஒரு படத்தில் பாலகிருஷ்ணாவின் மிரட்டலுக்கு பணிந்து ரயிலே பின்னாடி செல்லும் வீடியோவை நாம் பார்த்திருப்போம்.
#VeeraSimhaReddy
Screen unmailaye on fire 🙁😐pic.twitter.com/YJPEgviYFr
— Venkatramanan (@VenkatRamanan_) January 12, 2023
இந்த நிலையில் வீர சிம்ஹா ரெட்டி படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஸ்கீரின் எரிந்துகொண்டிருக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் ரசிகர்கள் வைத்த தீயா வேறு காரணங்களால் எரிகிறதா என்பது தெரியவில்லை. பிரபல நடிகர்களின் முதல் காட்சியில் உற்சாகத்தில் ரசிகர்கள் திரையரங்கை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடர் கதையாகிவருவது குறிப்பிடத்தக்கது.
கிராக் படத்துக்கு பிறகு கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு காணப்பட்டது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.