ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீர சிம்ஹா ரெட்டி ரிலீஸ் நாளில் திரைக்கு தீ வைத்த பாலகிருஷ்ணா ரசிகர்கள்

வீர சிம்ஹா ரெட்டி ரிலீஸ் நாளில் திரைக்கு தீ வைத்த பாலகிருஷ்ணா ரசிகர்கள்

வீர சிம்ஹா ரெட்டி

வீர சிம்ஹா ரெட்டி

வீர சிம்ஹா ரெட்டி, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விசாகப்பட்டினத்தில் வீர சிம்ஹா ரெட்டி படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திரை தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்தமுரி பாலகிருஷ்ணா வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து திரையை தீ பிடிக்க செய்துள்ளார். ஆம், விசாகப்பட்டினத்தின் சப்பாவரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை ரசித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென திரை தீ பிடித்துள்ளது. அந்தத் திரை எப்படி தீப்பிடித்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், படம் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் விதமாக, உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வீர சிம்ஹா ரெட்டி, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஒரு வழக்கமான மாஸ் மசாலா என்டர்டெய்னர், இதில் பாலையா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பாலையாவின் படங்களைக் கொண்டாடும் விஷயத்தில் அவரது ரசிகர்களை அடித்துக் கொள்ள முடியாது. ரசிகர்களின் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக அமெரிக்காவில் வீர சிம்ஹா ரெட்டி படத்தின் பல ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் விசாகப்பட்டினம், சப்பாவரத்தில் உள்ள திரையரங்கில் வீர சிம்ம ரெட்டி படம் திரையிடப்பட்டபோது திரை தீப்பிடித்தது. ரசிகர்கள் சிலர், உற்சாகத்தில் திரைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு படம் பார்த்த மற்றவர்கள் எரிச்சலடைந்த நிலையில், உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

வீர சிம்ஹா ரெட்டி கோபிசந்த் மலினேனி எழுதி இயக்கிய மாஸ் மசாலா ஆக்ஷன் படம். பாலையா இரு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் துனியா விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nandamuri Balakrishna