ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?! சென்னை திரையரங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் செய்த முரட்டு சம்பவம்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?! சென்னை திரையரங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் செய்த முரட்டு சம்பவம்

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

மேலும் அமெரிக்க திரையரங்கம் ஒன்றில் உற்சாகத்தில் ரசிகர்கள் பேப்பர்களை பறக்க விட்டெறிந்திருக்கின்றனர். இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் ரசிகர்களிடையே எச்சரிக்கவிடுத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. கோபிசந்த் மலினேனி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் துனியா விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இருப்பினும் ரசிகர்களைப் பெரிதும் இந்தப் படம் கவர்ந்துள்ளது. பாலகிருஷ்ணா வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் வெறித்தனம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக பாலகிருஷ்ணாவின் ஆக்சன் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கத்தின் தீ பிடித்திருக்கிறது. எப்படி தீ பிடித்தது என தெரியாத நிலையில் ரசிகர்கள் உடனடியாக திரையரங்கை விட்டு வெளியேறுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் அமெரிக்க திரையரங்கம் ஒன்றில் உற்சாகத்தில் ரசிகர்கள் பேப்பர்களை பறக்க விட்டெறிந்திருக்கின்றனர். இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் ரசிகர்களிடையே எச்சரிக்கைவிடுத்திருக்கிறது.

இதுபோன்ற சம்பவம் சென்னை திரையரங்கம் ஒன்றிலும் அரங்கேற்யிருக்கிறது. திரையரங்கத்தில் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் மாஸ் கட்சிகளுக்கு பேப்பர்களை கிழித்து பறக்கவிட்டிருக்கிறார்கள். இதனால் திரையரங்கம் முழுவதும் பேப்பர் குப்பைகள் குவிந்திருக்கிறது. இந்த வீடியோவை திரையரங்க நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

தமிழில் இந்த வருட பொங்கலுக்கு விஜய்யின் வாரிசா அஜித்தின் துணிவா என கடந்த சில சில மாதங்களாக ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, தெலுங்கில் சங்கராந்திக்கு பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியா சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவா என ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இரண்டு படங்களிலும் ஸ்ருதி ஹாசன் தான் ஹீரோயின். இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

First published:

Tags: Actress shruti Haasan, Nandamuri Balakrishna