Home /News /entertainment /

தெலுங்கு பாக்ஸ் ஆபிஸை கலக்கும் அகண்டா!

தெலுங்கு பாக்ஸ் ஆபிஸை கலக்கும் அகண்டா!

அகண்டா

அகண்டா

பாலகிருஷ்ணாவின் ஹீரோயிசத்தை அடுத்தத் தளத்துக்கு பொய்யாப்பட்டி ஸ்ரீனு கொண்டு சென்றிருக்கிறார் என பத்திரிகைகள் பாராட்டுகின்றன.

நேற்று இரு முக்கிய திரைப்படங்கள் வெளியானது. மலையாளத்தில் மோகன்லால் நடித்திருக்கும் மரைக்காயர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் அகண்டா. இரண்டுமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள். மரைக்காயர் தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியானது. ஆனால், படம் ரசிகர்களை ஏமாற்றியது. நெகடிவ் விமர்சனங்களே படத்துக்கு அதிகம் கிடைத்துள்ளன. எதிர்பார்த்த வெற்றியை மரைக்காயர் தவறவிட்டதோடு, எதிர்பாராத தோல்வியையும் சந்தித்துள்ளது.

அப்படியே தெலுங்குப் பக்கம் வந்தால் பாலகிருஷ்ணாவின் அகண்டா ரசிகர்களை ஒட்டு மொத்தமாக திருப்தி செய்துள்ளது. பாலகிருஷ்ணாவின் ஹீரோயிசத்தை அடுத்தத் தளத்துக்கு பொய்யாப்பட்டி ஸ்ரீனு கொண்டு சென்றிருக்கிறார் என பத்திரிகைகள் பாராட்டுகின்றன. இதில் பாலகிருஷ்ணா அகோரியாக நடித்துள்ளார்.

பாலகிருஷ்ணா படம் என்றால் சூப்பர் ஹீரோக்கள் தோற்றுப் போவார்கள். கைத்தட்டி ரயிலை நிறுத்துவது, கைக்கு ஒன்றாக சுமோவை சுழற்றி வீசுவது, காலை சுழற்றி புயல் வரவழைப்பது என அவரது சாகசங்கள் மிரள வைப்பவை. ஆனால், அதனை ரசிக்க ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் திரளான ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திலும் அவர் சூலாயுதத்தை நிலத்தில் குத்தினால் நாலு பேர் தெறித்து விழுகிறார்கள். அதனால் என்ன... ஹீரோயிசம் இருக்கிறதா இல்லையா. ரசிகர்களுக்கு அது போதும்.

அகண்டாவின் இன்னொரு விசேஷம் தமனின் இசை. சில திரையரங்குகள் எங்கள் சவுண்ட் சிஸ்டத்தால் தமனின் இசையை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று செய்தியே வெளியிட்டுள்ளன. அந்தளவுக்கு அடித்து முழக்கியிருக்கிறார். இவை எல்லாமுமாகச் சேர்ந்து அகண்டாவை பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தெலுங்கு சினிமா சந்திக்கும் முதல் மாஸ் வெற்றி இது. திரையுலகமே பாலகிருஷ்ணாவை கொண்டாடுகிறது.

மேலும் படிக்க - 3 தேசிய விருதுகள் படமா இது? ஏமாற்றமளித்த மோகன்லாலின் மரைக்காயர்

பொய்யாப்பட்டி ஸ்ரீனு இதற்கு முன் பாலையாவை வைத்து சிம்ஹா, லெஜென்ட் படங்களை இயக்கியுள்ளார், இரண்டுமே ஹிட். அகண்டா இந்த கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றி. 61 வயதாகும் பாலையா இன்னும் அரை நூற்றாண்டு இதேபோல் ரயிலையும், கார்களையும் பறக்கவிடுவார். அவரது ஃபேன் பேஸ் அப்படி.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mohanlal, Nandamuri Balakrishna

அடுத்த செய்தி