Home /News /entertainment /

பிரசன்னா, எஸ்.பி.பி.சரண் நடிக்கும் புதிய வெப் தொடர்...!

பிரசன்னா, எஸ்.பி.பி.சரண் நடிக்கும் புதிய வெப் தொடர்...!

பிரசன்னா, எஸ்.பி.பி.சரண் நடிக்கும் புதிய வெப் தொடர்

பிரசன்னா, எஸ்.பி.பி.சரண் நடிக்கும் புதிய வெப் தொடர்

பிரசன்னா, எஸ்.பி.பி.சரணுடன் தான்யா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலரும் நடிக்கின்றனர். இதில் பிரசன்னா, கனிகா இருவரும் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர்கள் என்பது முக்கியமானது.

  • News18
  • Last Updated :
திரைப்படங்கள் அளவுக்கு தமிழில் வெப் தொடர்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், உருப்படியாக ஒன்றும் தேறவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். சென்ற வருடம் விகடன் தயாரிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி மட்டும் ஓரளவு நியாயம் செய்தது. தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார் இதில் நடித்திருந்தனர்.

வெப் தொடர்களில் இந்திக்காரர்கள் ஹாலிவுட்டுக்கு சவால்விடும் தொடர்களை எடுத்து வருகின்றனர். தெலுங்கில் சமீபத்தில் வெளியான பரம்பரா ரசிகர்களை கவர்ந்துள்ளது. ராஜமௌலியும் தொடரை பாராட்டியுள்ளார். சரத்குமார் இதில் பிரதான வேடங்களில் ஒன்றில் நடித்துள்ளார். குடியெடமதே வெப் தொடரும் நல்ல பெயரை சம்பாதித்தது.

தமிழில் கதிர் நடிப்பில் அமேசான் சுழலி என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறது. தொடர் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் நான்கு டஜன் தொடர்கள் தமிழில் தயாராகி வருகின்றன.

புதிதாக பிரசன்னா, எஸ்.பி.பி.சரண் நடிக்கும் காமெடி வெப் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளனர். ட்ரென்ட் லவுட் இன்டியா டிஜிட்டல் நிறுவனமும், ஓபன் வின்டோ நிறுவனமும் இணைந்து இந்தத் தொடரை தயாரிக்கின்றன.

Also read... 8 வருடங்களுக்குப் பிறகு கரு.பழனியப்பன் இயக்கும் ஆண்டவர்...!

பிரசன்னா, எஸ்.பி.பி.சரணுடன் தான்யா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலரும் நடிக்கின்றனர். இதில் பிரசன்னா, கனிகா இருவரும் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர்கள் என்பது முக்கியமானது.

இயக்குனர் பாலாஜி மோகனிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் விஜயகுமார் இந்தத் தொடரை எழுதி இயக்குகிறார். சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Prasanna

அடுத்த செய்தி