முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜா மனக்கசப்பு.. பாலச்சந்தர் கண்டெடுத்த 2 பேர்.. ஆஸ்கர் நாயகன்களின் கதை!

இளையராஜா மனக்கசப்பு.. பாலச்சந்தர் கண்டெடுத்த 2 பேர்.. ஆஸ்கர் நாயகன்களின் கதை!

ஏஆர் ரகுமான் மற்றும் எம்.எம்.கீரவாணி

ஏஆர் ரகுமான் மற்றும் எம்.எம்.கீரவாணி

இளையராஜாவிற்கு எதிராக பாலச்சந்தர் களம் இறக்கிய இரண்டு இசையமைப்பாளர்களும் ஆஸ்கர் விருது சொல்லி வைத்தார் போல அடுத்தடுத்து கிடைத்தது ஒட்டுமொத்த சினிமா உலகையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு தகவலாகவே பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இளையராஜா உடனான மனக்கசப்பிற்கு பிறகு பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இரண்டு இசையமைப்பாளர்களும் சொல்லி வைத்தார் போல ஆஸ்கர் வென்றுள்ளது, சினிமா நடிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என கொண்டாடப்படும் பாலச்சந்தர் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து தமிழ் சினிமா மறக்க முடியாத பல பாடல்களை வழங்கியவர்.

பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய இந்த இருவர் கூட்டணி 1989 ஆம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தது.

பாலச்சந்தர் இளையராஜா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு அன்றைய நாளிதழ்கள் மூலம் அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திற்கு பிறகு பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களுக்கு இளையராஜாவை மீண்டும் அவர் அழைக்கவே இல்லை. இந்த காலகட்டத்தில் அவர் இயக்கிய அழகன் திரைப்படத்தில் தெலுங்கு இசையமைப்பாளரான எம் எம் கீரவாணியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்பிறகு அவர் இயக்கிய ஜாதிமல்லி திரைப்படத்திலும் எம் எம் கீரவாணியையே இசையமைப்பாளராக பயன்படுத்தினார் பாலச்சந்தர் இதே காலகட்டத்தில் பாலச்சந்தர் தயாரித்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

பாலச்சந்தர் ஒரு தயாரிப்பாளராக அறிமுகம் செய்து ஏ ஆர் ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற நிலையில் தற்போது கீரவாணி ட்ரிபிள் ஆர் திரைப்படத்திற்காக நாட்டு குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

இளையராஜாவிற்கு எதிராக பாலச்சந்தர் களம் இறக்கிய இரண்டு இசையமைப்பாளர்களும் ஆஸ்கர் விருது சொல்லி வைத்தார் போல அடுத்தடுத்து கிடைத்தது ஒட்டுமொத்த சினிமா உலகையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு தகவலாகவே பார்க்கப்படுகிறது.

ஒருவேளை பாலச்சந்தர் உடன் இளையராஜா முரண்படாமல் இருந்திருந்தால் இரண்டு ஆஸ்கர் விருது இசையமைப்பாளர்கள் இந்தியாவிற்கு கிடைத்து இருப்பார்களா என்று வினோதமாகவும் எண்ண தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: AR Rahman, Balachandran, Oscar Awards