பாலா, சூர்யா, ஷங்கர் கலந்து கொண்ட விருமன் பூஜை!

விருமன் பூஜை

பாலா விருமன் பூஜையில் கலந்து கொண்டதைப் பார்த்தால் அதிதிக்கும் தனது படத்தில் வாய்ப்பு தருவாரோ என சந்தேகம் எழுகிறது.

  • Share this:
    2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறது. கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தையும் 2டி என்டர்டெயின்மெண்டே தயாரித்தது. தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார்.

    நேற்று படத்தின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட்டவர்கள் இன்று பூஜையுடன் படத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாயகன் கார்த்தி, இவர்களின் தந்தை சிவகுமார், நாயகி அதிதி, அவரது தந்தையும் இயக்குனருமான ஷங்கர், படத்தின் இயக்குனர் முத்தையா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    எதிர்பாராத விருந்தாளியாக பாலாவும் இதில் கலந்து கொண்டார். பாலாவின் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், சூர்யா கௌரவ வேடத்திலும் நடிப்பதாக தகவல். பாலா விருமன் பூஜையில் கலந்து கொண்டதைப் பார்த்தால் அதிதிக்கும் தனது படத்தில் வாய்ப்பு தருவாரோ என சந்தேகம் எழுகிறது.

    Bala, Suriya, Shankar attended Viruman movie pooja, Director Shankar daughter Aditi debut as heroine in Karthi Viruman, shankar family, aditi shankar, aditi shankar linkedin, aditi shankar, director shankar daughter, aditi shankar husband, aditi shankar director, aditi shankar age, aditi shankar instagram, இயக்குநர் ஷங்கர், விருமன் திரைப்படம், கார்த்தி, அதிதி ஷங்கர், கார்த்தி அதிதி ஷங்கர், அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராம், viruman pooja, viruman movie pooja
    விருமன் பூஜை


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Bala, Suriya, Shankar attended Viruman movie pooja, Director Shankar daughter Aditi debut as heroine in Karthi Viruman, shankar family, aditi shankar, aditi shankar linkedin, aditi shankar, director shankar daughter, aditi shankar husband, aditi shankar director, aditi shankar age, aditi shankar instagram, இயக்குநர் ஷங்கர், விருமன் திரைப்படம், கார்த்தி, அதிதி ஷங்கர், கார்த்தி அதிதி ஷங்கர், அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராம், viruman pooja, viruman movie pooja
    விருமன் பூஜை


    முத்தையாவின் பிற படங்கள் போலவே கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த படமாக விருமன் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: