• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாலா, சூர்யா, யுவன் - ஒன்றிணையும் நந்தா கூட்டணி...!

பாலா, சூர்யா, யுவன் - ஒன்றிணையும் நந்தா கூட்டணி...!

பாலா, சூர்யா, யுவன்

பாலா, சூர்யா, யுவன்

பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் ஓடவில்லை. நாச்சியார் தப்பித்தாலும், பாலா படம் என்ற முத்திரையை பதிக்காத படம் அது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலாவின் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. டிசம்பரில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

2001 இல் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திலிருந்தே சூர்யாவின் திரைவாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. நந்தாவுக்கு யுவன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களை கட்டிப்போட்டன. பாலா, சூர்யா, யுவன் என்ற அந்த பழைய கூட்டணி மறுபடியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புதிய படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கௌரவ வேடத்தில் சூர்யா நடிக்கலாம் என்கின்றன செய்திகள். இசை யுவன் சங்கர் ராஜா. இதற்குமுன் நந்தா தவிர்த்து பாலாவின் அவன் இவனுக்கும் யுவன் இசையமைத்திருந்தார். இது யுவன் இசையமைக்கும் பாலாவின் மூன்றாவது படம்.

Also read... தமிழக திரையரங்குகளை காப்பாற்றிய இரு ஹாலிவுட் படங்கள்...!

பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் ஓடவில்லை. நாச்சியார் தப்பித்தாலும், பாலா படம் என்ற முத்திரையை பதிக்காத படம் அது. பழைய சேது, நந்தா, பிதாமகன் பாலாவை இந்த புதிய படத்தில் மறுபடியும் பார்க்க முடியுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: