முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''பெண்கள் அழகாக காட்டும் புரொஃபைல் பிக்சரை வைக்காதீங்க, ஏன்னா...'' - சர்ச்சையான மோகன்.ஜியின் பேச்சு

''பெண்கள் அழகாக காட்டும் புரொஃபைல் பிக்சரை வைக்காதீங்க, ஏன்னா...'' - சர்ச்சையான மோகன்.ஜியின் பேச்சு

மோகன்.ஜி

மோகன்.ஜி

விழா ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி,  பெண்கள் சமூக வலைதளங்களில் புரொஃபைல் பிக்சர்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழைய வண்ணாரபேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. அடுத்ததாக இவர் இயக்கிய திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தன.

தற்போது செல்வராகவன், நட்டி நடராஜ் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். வருகிற 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

இந்த நிலையில் விழா ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி,  பெண்கள் சமூக வலைதளங்களில் புரொஃபைல் பிக்சர்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,  உங்களை அழகாக காட்டக் கூடிய புரொஃபைல் பிக்சர்களை வைக்காதீர்கள். அதுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி.

நீங்கள் டார்க்கெட் செய்யப்படுவது அந்த இடத்திலிருந்து தான் என்று பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவிவருகிறது. இது சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பேசிய வீடியோ என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Director mohan, Mohan