ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிங் கோலி... விராட் கோலிக்காக தலைவணங்கிய பாகுபலி இயக்குநர் ராஜமௌலி!

கிங் கோலி... விராட் கோலிக்காக தலைவணங்கிய பாகுபலி இயக்குநர் ராஜமௌலி!

விராட் கோலி - ராஜமௌலி

விராட் கோலி - ராஜமௌலி

ராஜமௌலி அவ்வளவு எளிதாக ட்வீட் போடமாட்டார். கோலியை பாராட்டி அவர் பதிவிட்டிருப்பது லைக்ஸ்களை ஜெட் வேகத்தில் குவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வெற்றிபெற காரணமாக இருந்த விராட் கோலியை பாராட்டி பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ளது.

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

  160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர்… ஒரே நாளில் படங்கள் ரிலீஸ்?

  இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சமூக வலை தளங்களில் King Kohli  என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

  இந்நிலையில் மிக அரிதாகவே ட்வீட் போடும் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி கோலியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ‘கிங் கோலிக்கு தலை வணங்குகிறேன்’ என்று கூறியுள்ளார். ராஜமௌலியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

  பிரபலங்கள் பலரும் இந்த பதிவை ரீ ட்வீட் செய்துள்ளனர். ராஜமௌலி அவ்வளவு எளிதாக ட்வீட் போடமாட்டார். கோலியை பாராட்டி அவர் பதிவிட்டிருப்பது லைக்ஸ்களை ஜெட் வேகத்தில் குவித்துள்ளது.

  உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வீடியோ!

  ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை இயக்கவுள்ளார். ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஆப்பிரிக்க காடுகளில் தங்க புதையலை தேடி கதாநாயகன் செல்வதுதான் இந்த படத்தின் மையக்கதை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரவுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Captain Virat Kohli, Rajamouli