பிரிட்டிஷ் அகாடமி வழங்கும் பாஃப்தா விருதை வென்ற ரோமா!

ரோமா படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ குரோன் (Alfonso Cuaron) சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றார்.

பிரிட்டிஷ் அகாடமி வழங்கும் பாஃப்தா விருதை வென்ற ரோமா!
பாஃப்தா விருந்து
  • News18
  • Last Updated: February 11, 2019, 12:40 PM IST
  • Share this:
பிரிட்டிஷ் அகாடமி மூலம் வழங்கப்படும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான பாஃப்தா விருதை ரோமா படத்தின் இயக்குநர் தட்டிச் சென்றார். தீ ஃப்வேரைட் (The Favourite) படம் அதிகபட்சமாக 7 விருதுகளை குவித்தது.

பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட பல்வேறு பிரிவுகளில் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோமா (Roma) சிறந்த படமாக தேர்வானது.

ரோமா படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ குரோன் (Alfonso Cuaron) சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றார்.


போஹேமியன் ராப்சோடி(Bohemian Rhapsody) படத்தில் நடித்த அமெரிக்காவைச் சேர்ந்த ராமி மாலிக் (Rami Malek) சிறந்த நடிகராகவும், தீ ஃப்வேரைட் (The Favourite) படத்தில் நடித்த ஒலிவியா கோல்மன் (Olivia Colman) சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

"கிரீக் புக்"- கில் நடித்த மஹேர்ஷாலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த துணை நடிகைக்கான விருது " தீ தீ ஃப்வேரைட் (The Favourite)" படத்தில் நடித்த ரேச்சல் வெயிசுஸ்-க்கு வழங்கப்பட்டது.

எ ஸ்டார் ஸ் பார்ன் (A Star is Born) படத்திற்கு இமைசயமைத்த பிரட்லி கூப்பர், லேடி காகா மற்றும் லுகாஸ் நெல்சன் ஆகியோருக்கு சிறந்த இசைக்கான விருது அளிக்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்-வாரிசு (Spider-Man: Into the Spider-Verse) தட்டிச் சென்றது.சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, திரைக்கதை உள்ளிட்ட 7 விருதுகளை பெண்களின் அதிகாரத்தை மையமாக கொண்ட தீ ஃப்வேரைட் (The Favourite) படம் பெற்றது. இப்படத்திற்கு 12 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

லண்டனின் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரை பிரபலங்களுடன் இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோரும் பங்கேற்றனர்.

Also see... காமராஜர் விரும்பிய ஆட்சியை நடத்துகிறது பாஜக... திருப்பூரில் பிரதமர் மோடி உரை
First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்