Home /News /entertainment /

பாட்ஷாவுக்காக கிளாமராக ஆடிய தமன்னா...!

பாட்ஷாவுக்காக கிளாமராக ஆடிய தமன்னா...!

பாட்ஷா, தமன்னா

பாட்ஷா, தமன்னா

தமன்னா கடைசியாக தமிழில் நடித்த படம் ஆக்ஷன். அதன் பிறகு நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார்.

  • News18
  • Last Updated :
கிளாமருக்கும், தமன்னாவுக்கும் பத்துப் பொருத்தங்கள் எப்போதும் பொருந்திவரும். கிளாமராக நடிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவரை அவர் நடித்தப் படங்களும், பாடல் காட்சிகளுமே சாட்சி. அவையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். பாட்ஷாவுக்காக ஆடிய பாடல் இது.

பாட்ஷா என்றதும் ரஜினியின் பாட்ஷாதான் நினைவுவரும். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பிரபல ராப்பர் பாட்ஷா. இவரது வீடியோ ஆல்பம் ஒன்றில் தமன்னா ஆடியுள்ளார். இப்படி தமன்னா ஆடுவது இதுவே முதல்முறை. இதில் மிகத்தாராளமான கவர்ச்சியில் தமன்னா ஆடியுள்ளார். அத்துடன் பாடலின் கிளிம்ப்ஸ் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.



தமன்னா கடைசியாக தமிழில் நடித்த படம் ஆக்ஷன். அதன் பிறகு நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர மேலும் மூன்று தெலுங்குப் படங்கள் தமன்னா நடிப்பில் வெளிவர உள்ளன. இவை தவிர இந்திப் படங்கள் சிலவும் அவரது கைவசம் உள்ளது. விரைவில் தமிழ்ப் படம் ஒன்றிலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Also read... விரைவில் வெளிவர இருக்கும் இரஞ்சித், வெங்கட்பிரபுவின் ஆந்தாலஜி படம்!

ராப்பர் பாட்ஷாவின் ஆல்பத்தில் தமன்னா ஆடுவது இதுவே முதல்முறை. தமன்னாவின் கவர்ச்சிதான் இந்த ஆல்பத்தின் ஹைலைட்டாக இருக்கப் போகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tamannaah bhatia

அடுத்த செய்தி