Home /News /entertainment /

அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!

அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!

சாய்னா - சித்தார்த்

சாய்னா - சித்தார்த்

தேசிய மகளீர் ஆணையம் சித்தார்த்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி பரிந்துரை செய்தது.

    நடிகர் சித்தார்த்தின் ட்வீட்டுக்கு பதிலடி தரும் விதமாக பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

    ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என பலர் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால், 'எனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்தார்.

    சாய்னாவின் அந்த ட்வீட்டுக்கு, “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார் நடிகர் சித்தார்த்.



    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    அவரின் இந்த பதிலுக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின. தேசிய மகளீர் ஆணையம் சித்தார்த்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி பரிந்துரை செய்தது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால், ’அவர் எதை பற்றி பேசினார் என எனக்கு புரியவில்லை. எனக்கு நடிகராக அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. நல்ல வார்த்தைகளால் அவரது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் ஒரு பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் பின்னர் நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Siddharth, Saina Nehwal

    அடுத்த செய்தி