கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலும், சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியாவும் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் புதிய பட அறிவிப்பு திரையுலகில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
ஹாலிவுட் நிறுவனங்கள் இந்தியாவில் முன்பே படங்கள் தயாரித்து வருகின்றன. இந்தியில் படத்தயாரிப்பை ஆரம்பிக்கும் அவர்கள் அடுத்தக் கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நகர்வது வாடிக்கை. இந்த மொழிகளில் உள்ள முன்னணி இயக்குனர்கள், நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பதே இவர்களின் தொழில் வியூகம். அப்படி இதற்கு முன் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி போன்ற படங்களை தயாரித்தது. அப்போது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் முக்கியப் பொறுப்பில் மகேந்திரன் என்பவர் இருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சிக்கு படங்கள் வாங்கித் தரும் பொறுப்பில் இருந்தவர்.
நஷ்டம் காரணமாக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தமிழில் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. மகேந்திரன் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் போல மக்கள் நீதி மய்யத்தில் மகேந்திரன் செயல்பட்டார். (கமல் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரன் வேறொருவர். அவர் கோவையை சேர்ந்த மருத்துவர், இவர் வேறு ஒருவர்)
பாஜக ஊடகங்களை மிரட்டலாம், ஆனால்... தனியார் சேனல் சர்ச்சை குறித்து ஜோதிமணி எம்.பி
சோனி பிக்சர்ஸ்ஃபிலிம்ஸ் இந்தியா கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைய இந்த மகேந்திரனே முக்கிய காரணம் என்கிறார்கள். சிவகார்த்திகேயன், கமலுடன் சேர்த்து இந்த மகேந்திரனுக்கும் நன்றி கூறியுள்ளார். படத்துக்கு பைனான்ஸ் செய்வது சோனி. அதனை ராஜ் கமல் பேனரில் எடுத்துத் தருவது கமல். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், யுடிவி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் நஷ்டமடைந்து தமிழைவிட்டு ஓடாமல் சோனி பிக்சர்ஸாவது தாக்குப் பிடிக்க வேண்டும். அது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் கையில் தான் உள்ளது.
மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
சோனியும், கமலும் இணையும் இந்த புதிய படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ரங்கூன் வித்தியாசமான கதைக்களத்தில் கவனிக்க வைத்த படம். இந்தப் படத்தை அதைவிட சிறப்பாக அவர் இயக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Sivakarthikeyan