முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தியிடம் கதை சொன்ன பேச்சிலர் பட இயக்குனர்...!

கார்த்தியிடம் கதை சொன்ன பேச்சிலர் பட இயக்குனர்...!

சதீஷ் செல்வகுமார்

சதீஷ் செல்வகுமார்

கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்துள்ளார். விருமன் படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சமீபத்தில் வெளியான ஜீ.வி.பிரகாஷின் பேச்சிலர் திரைப்படத்தை இயக்கியவர் சதீஷ் செல்வகுமார். இவர் கூறிய கதை கார்த்திக்கு பிடித்திருப்பதாகவும், கார்த்தியின் அடுத்தப் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்குவார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்துள்ளார். விருமன் படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அப்படமும் நிறைவுபெற உள்ளது. அடுத்து நடிப்பதற்காக கார்த்தி கதைகள் கேட்டு வருகிறார். அதில் பேச்சிலர் படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் சொன்ன கதை அவருக்குப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கார்த்தியின் பல படங்களை தயாரித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்கள் தயாரிப்பில் ஒரு படம் இயக்க, சதீஷ் செல்வகுமாருக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளது. இது அனேகமாக கார்த்தியை வைத்து அவர் இயக்கப் போகும் படத்திற்காக அளித்த முன்பணமாக இருக்கலாம். அதாவது கார்த்தி நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

சதீஷ் செல்வகுமாரின் பேச்சிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிறகு ஓடிடியில் வெளியாகி அங்கேயும் கணிசமான பார்வைகளை பெற்று வருகிறது. அடல்ட் கன்டென்டில் அமைந்த பேச்சிலர் படத்தை இயக்கியவர் கார்த்தியை வைத்து என்ன மாதிரியான படத்தை தருவார்?

Also read... புஷ்பா இயக்குனருடன் இணைகிறாரா தனுஷ்? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

கேள்வியே ஆர்வத்தை தூண்டினாலும் கார்த்தி, சதீஷ் செல்வகுமார் இணையும் தகவலை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

First published:

Tags: Actor Karthi